அம்பாள் என்றும் உங்களுடன் துணையிருப்பாள்
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஏன்?
ஆன்மீக பக்தர்களுக்கு வணக்கம்
சுவிஸ் நாட்டில் கால் நூற்றாண்டிற்கு மேலாக ஆன்மீகம் ஊடாக உங்கள் வாழ்வியலில் ஒண்டற கலந்திருந்து இன்று மூன்றாவது சந்ததிக்கும் ஆன்மீக சேவையாற்றும் பெரும் பாக்கியத்தை தந்துள்ள எல்லாம் வல்ல இறைவன் பல வடிவங்களில் என்னையும் உங்களையும் அருளாட்சி செய்கின்றான்.
கடந்த 25 ஆண்டுகளாக நானும் நீங்களும் கட்டி காத்த எங்கள் தொய்வ வழிபாடுகள் இன்று சுவிஸ்நாட்டிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலுமுள்ள ஐரோப்பியர்கள் உட்பட்ட பல்லின மக்களின் மனங்களிலும் எங்கள் ஆன்மீக வழிபாடுகள் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ள இக்காலகட்டம் மிக முக்கியமானதாகும்.
நாங்கள் கலம் காலமாக கடைபிடித்துவரும் சமய நம்பிக்கைகளும் ஆன்மீக செயற்பாடுகளும் தமிழர்கள் ஆகிய எங்களுக்கு பெரும் அடையாளத்தை பெற்று தந்துள்ள போதும் எங்கள் அடையாளங்களும் நம்பிக்கைகளும் எமது தாய்நிலத்திலும் தமிழர்கள் வாழும் புலத்திலும் போற்றி காப்பாற்ற வேண்டியது எங்கள் அனைவரது கடமையாகும்.
எங்கள் முன் இருக்கும் இக்கடமைகளை சரிவர செய்வதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் ஓர் பாலமாகவும் புதிய பலமாகவும் இவ் இணையத்தளம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உங்களுடன் இணைகின்றது சிறி துர்கா இணையத்தளம்.
நன்றி
சர்மா குருக்கள்
சுவிஸ்
2019